Sunday, 28 June 2015

என் பால்ய  நண்பன் வீட்டிற்கு சென்றிருந்தேன்....
இமைகள் விரிய விரிய அதிசயங்கள்...
பாட்டன் காலத்து மரங்கள் முதல் பல வகை மரங்கள்......
இவன் இயற்கை காதலனோ...!
இல்லை மறந்து பிறந்த மரத்தின் காதலனோ தெரியவில்லை....!
கோடி பூரிப்புடன் ஒவ்வொரு மரங்களின் மருத்துவ நலங்களையும் அழகாக விளக்கினான்...
புகை நிறைந்த சாலை,நெரிசல் மிகுந்த கூட்டம் என பழகி போன மனதுக்கு செம்மை மரங்கள் பார்த்ததும் மனம் செழுமையானது....
மனமில்லா வீடு திரும்பிய எனக்கோ தீர்க்க முடியா குழப்பம் .....
என் நண்பன் வீட்டு மரங்களுக்கு கிளைகள் இல்லை...
இலைகள் இல்லை...!
கேட்போர் விழி விரியும் விலை மட்டும் இருந்தது!!!!!!!!!!!!!!

மரம் வளர்ப்போம்...மனிதம் காப்போம்..........

அன்புடன் விக்னேஷ்....
விதைகள்...!

No comments:

Post a Comment