Thursday, 9 July 2015

வீழ்வேன் என்று நினைத்தாயோ ???

தோழா!
பாதைகளுக்கு நடுவே பள்ளங்களை காண்கிறவன் அச்சம் கொள்கிறான்..
பள்ளங்களுக்கு நடுவே பாதைகளை காண்கிறவன் வெற்றி கொள்கிறான்..!
காட்டாறு வெள்ளம் போல் காலம் உன்னை சுழற்றும்..கலங்கிவிடாதே...!
உன் கனவுகளை சொல்லி முடிக்கும் முன்.. பலர் கனவுப் பசிக்கு உணவாக மாறுவாய்..பல மாயைகள் கண்டு மயங்கிவிடாதே...!
நம்பிக்கை விரித்திடு ..வான் ஏறி நட்சத்திரம் பறித்திடு...!
முடியாதென்னும் எண்ணங்களை இன்றே மண்ணோடு மறித்திடு..!.
நாளை நினைத்து வருந்தி வருந்தி இன்றை இழப்பார் பலர்...
நாளை நினைத்து இன்றே உழைத்து உயரப் பறப்பார்  சிலர்...!
அழுத்தம் தாங்கும் பொழுதெல்லாம் தோழா அயர்ந்துவிடாதே..
அழுத்தங்களால்  ஆழம் பார்க்கும் விதைகள் தான் மண்ணில் விருட்சம் கொள்ளும் மறந்துவிடாதே.... ...!!!

-அன்புடன் விக்னேஷ்!
விதைகள்.

No comments:

Post a Comment