துதி பாடல்
அணுவிர்க்கு அணுவாய் இருக்கும் சக்தி ,வேதமும்,விண்ணவரின் வாழ்த்தும் ,
எப்பொழுதும் அதன் காதில்
ஒலிதிடுமாம்
பாவம் என்று பாமரன் புலம்பினால்,
"நீ முன் செய்த பாவத்தால் -இப்
பாவ நிலை கிட்டியது "
என்று பாசாங்கு பல சொல்லுமாம்
பணம் கொண்ட மனிதன்
பல கோடிகள் இரைத்தும்
அசகாய சக்தி கொண்ட அது
பூசைகள் பல கேட்குமாம்
மறந்து தூங்கிய மாயாயே...........
******************************
ஏழை பாட்டாளி எலி சமைத்து
அதை தின்று
மடிகிறானே அவனுக்கேனும்
கலியுக பாஞ்சாலிகள் துயிலுரிய
காண்கிறேனே அவர்களுக்ககேனும்
புதுமை காணும் வயதில்
பழமை மறந்த இளைஞனுக்கேனும்
பிர தேசம் வாழும்
பாவியார்
புண்ணியம் பல சேர்த்தும்
பல் போன பெற்றவள்
பிணமாயினும்
பாராமல் இருக்கிறானே
அவணுகேனும்
நீ கண் திறவாயோ?
கலி மாற்றுவாயோ
நீன் கடை கண் பார்த்தால்
புவி இங்கு புன்னகைக்குமே
நஞ்சை காக்கும் நாகமும்,
சங்கொடு சக்கரம் இவே மூன்றும் உனை காக்க
நீ கண் அயர்ந்து கலி மறந்தாயோ?
போற்றியே உனை பாடும் புலவர் கூட்டம்
எந்தன் குறை பாட மறந்ததோ?
அப்படி நீ கண் திறந்தால்,
உனை சுற்றி கரைந்து கிடக்கும்
கண்ணீர் கடலை காண்பாய்.
அப்பொழுதெனும் எனை நீ கண்டால்
ஓம் நமோ நாராயணாய நம:
-பரத்ராம்
No comments:
Post a Comment