Sunday, 12 July 2015

வால் மனிதன்!

வால் கொண்ட மனிதனாகவே வாழ்ந்திருக்கலாம்,
வெறும் கால் கொண்டு என்ன கண்டோம்!
பண்டங்களுக்கான போர் கண்டங்களுக்கான போரை விட பாதுகாப்பானது....
முறையற்ற திருமணங்கள் நடந்திருக்கும்,
இருப்பினும் குறை பார்க்கா
இரு மணங்கள் இணைந்திருக்கும்...!
கிளைக்கு கிளை தாவியிருக்கலாம்...
கூட்டோடு சேர்ந்து கூவியிருக்கலாம்.....
காட்டாட்ரில் முகம் கழுவி வானக் கண்ணாடியில் பின்பம் பார்த்திருக்கலாம்....!
நேரம் பார்க்காமல் ஆழ்ந்திருக்கலாம்...
மனத்தில் பாரம் சேர்க்காமல் வாழ்ந்திருக்கலாம்..
பெண் ஜாதி ஆண் ஜாதி என ஜாதிகளின் உண்மை பிரிவினை கண்டிருக்கலாம்....!
சாதிகளுக்கு சண்டையிடும் வேடிக்கை மனிதருக்கெல்லாம் ஒரு நாளேனும் நாம் கேளிக்கை பொருளாய் வாழ்ந்திருக்கலாம்....

அன்புடன் விக்னேஷ்
விதைகள்..

Saturday, 11 July 2015


துதி பாடல்

அணுவிர்க்கு அணுவாய் இருக்கும் சக்தி ,

வேதமும்,விண்ணவரின் வாழ்த்தும் ,
எப்பொழுதும் அதன் காதில்
ஒலிதிடுமாம்

பாவம் என்று பாமரன் புலம்பினால்,
"நீ முன் செய்த பாவத்தால் -இப்
பாவ நிலை கிட்டியது "
என்று பாசாங்கு பல சொல்லுமாம்


பணம் கொண்ட மனிதன்
பல கோடிகள் இரைத்தும்
அசகாய சக்தி கொண்ட அது
பூசைகள் பல கேட்குமாம்

மறந்து தூங்கிய மாயாயே...........
******************************
ஏழை பாட்டாளி எலி சமைத்து
அதை தின்று
மடிகிறானே அவனுக்கேனும்

கலியுக பாஞ்சாலிகள் துயிலுரிய
காண்கிறேனே அவர்களுக்ககேனும்

புதுமை காணும் வயதில்
பழமை மறந்த இளைஞனுக்கேனும்

பிர தேசம் வாழும்
பாவியார்
புண்ணியம் பல சேர்த்தும்
பல் போன பெற்றவள்
பிணமாயினும்
பாராமல் இருக்கிறானே
அவணுகேனும்

நீ கண் திறவாயோ?
கலி மாற்றுவாயோ

நீன் கடை கண் பார்த்தால்
புவி இங்கு புன்னகைக்குமே

நஞ்சை காக்கும் நாகமும்,
சங்கொடு சக்கரம் இவே மூன்றும் உனை காக்க
நீ கண் அயர்ந்து கலி மறந்தாயோ?

போற்றியே உனை பாடும் புலவர் கூட்டம்
எந்தன் குறை பாட மறந்ததோ?

அப்படி நீ கண் திறந்தால்,
உனை சுற்றி கரைந்து கிடக்கும்
கண்ணீர் கடலை காண்பாய்.

அப்பொழுதெனும் எனை நீ கண்டால்

ஓம் நமோ நாராயணாய நம:

-பரத்ராம்

Thursday, 9 July 2015

வீழ்வேன் என்று நினைத்தாயோ ???

தோழா!
பாதைகளுக்கு நடுவே பள்ளங்களை காண்கிறவன் அச்சம் கொள்கிறான்..
பள்ளங்களுக்கு நடுவே பாதைகளை காண்கிறவன் வெற்றி கொள்கிறான்..!
காட்டாறு வெள்ளம் போல் காலம் உன்னை சுழற்றும்..கலங்கிவிடாதே...!
உன் கனவுகளை சொல்லி முடிக்கும் முன்.. பலர் கனவுப் பசிக்கு உணவாக மாறுவாய்..பல மாயைகள் கண்டு மயங்கிவிடாதே...!
நம்பிக்கை விரித்திடு ..வான் ஏறி நட்சத்திரம் பறித்திடு...!
முடியாதென்னும் எண்ணங்களை இன்றே மண்ணோடு மறித்திடு..!.
நாளை நினைத்து வருந்தி வருந்தி இன்றை இழப்பார் பலர்...
நாளை நினைத்து இன்றே உழைத்து உயரப் பறப்பார்  சிலர்...!
அழுத்தம் தாங்கும் பொழுதெல்லாம் தோழா அயர்ந்துவிடாதே..
அழுத்தங்களால்  ஆழம் பார்க்கும் விதைகள் தான் மண்ணில் விருட்சம் கொள்ளும் மறந்துவிடாதே.... ...!!!

-அன்புடன் விக்னேஷ்!
விதைகள்.

Monday, 6 July 2015

BE A SIGNBOARD.... NOT A WALKING STICK!


This post is for people who going to be fathers or mothers .....

Teach them

  • not how to succeed in life but to overcome failures.....
  • not how to make friends but to live without enemies..
  • not how to climb heights without falling,but to climb even after falling...
  • not how to update tech gadgets,but to value traditions..
  • not how to drive safely,but show how unsafe it is to drive fast...
  • not how to control emotions,but to express them..
  • not how to be wise among large groups,but to be nice at least among small groups...
  • not how to follow great people,but to make great people to follow us...
  • not how to judge people,but to love people for who they are...
  • not how to use something that is already invented,but to invent something that is not  available
  • not how to avoid committing mistakes,but to avoid committing to mistakes...
  • not how to travel the safe path ,but to withstand when it is most unsafe..
Don't give them the most expected way for life..it will give them mere answers..Rather give them the most unexpected way..it will give them more values...

Answers are worth for exams,wherein values are worth for life...

ALWAYS EXPECT THE MOST UNEXPECTED!

EVERYTHING IS EXPERIENCE...

-VIGNESH.G



Make preparations for your new friend!

Branded pianos and dazzling guitars can produce music for ears but not for the soul..Here is a simple way to feed your soul with special music,the so called nature's voice..
Flocking weathers and colorful beaks is what you are going to meet in your simple effort..Excited? ..
Yes..tiny birds are going to round your home in next few steps..
Ever heard anything about "Bird Feeder".A simple low-cost  methodology can be readily implemented if you have a packet of food grains,fruit seeds and a container(plastic bottle is more than enough).and a stick..
Have a look on the below image...Humanity is when you start giving space for other creatures ...:) so, hurry up...make preparations.Welcome him home....:)

MOTIVATION

Recently i came across a review article of a upcoming Tamil movie called "HIKOO"...
There was a notable and awesome short scene in that movie which made me to write this post right now..
In china the school management had a habit of writing a quote in all their  classrooms,the quote is as follows

"IF YOU CAN'T DO SOMETHING, CHINA ALSO CAN'T DO THAT SOMETHING..IF CHINA CAN'T DO THAT SOMETHING THEN SURELY THIS WORLD ALSO CAN'T DO THAT SOMETHING"
Although the quote projects some slight dominating nature but it drives the student's potential to its fullest..
Sometimes sowing seeds of motivation might bring us a fruitful future to harvest,spread the positive spirit as possible. Success comes from the aura you are currently living in,make sure you have a healthy friends who supports and motivates you at right time..
So next time when you start to speak or write something,make sure you pack your words in confidence bag!

"Words from fountain will drive you to heights of mountain"...

Come up with full energy..
"Do something that worth writing or write something that worth reading"


Sunday, 28 June 2015

என் பால்ய  நண்பன் வீட்டிற்கு சென்றிருந்தேன்....
இமைகள் விரிய விரிய அதிசயங்கள்...
பாட்டன் காலத்து மரங்கள் முதல் பல வகை மரங்கள்......
இவன் இயற்கை காதலனோ...!
இல்லை மறந்து பிறந்த மரத்தின் காதலனோ தெரியவில்லை....!
கோடி பூரிப்புடன் ஒவ்வொரு மரங்களின் மருத்துவ நலங்களையும் அழகாக விளக்கினான்...
புகை நிறைந்த சாலை,நெரிசல் மிகுந்த கூட்டம் என பழகி போன மனதுக்கு செம்மை மரங்கள் பார்த்ததும் மனம் செழுமையானது....
மனமில்லா வீடு திரும்பிய எனக்கோ தீர்க்க முடியா குழப்பம் .....
என் நண்பன் வீட்டு மரங்களுக்கு கிளைகள் இல்லை...
இலைகள் இல்லை...!
கேட்போர் விழி விரியும் விலை மட்டும் இருந்தது!!!!!!!!!!!!!!

மரம் வளர்ப்போம்...மனிதம் காப்போம்..........

அன்புடன் விக்னேஷ்....
விதைகள்...!